சினிமா செய்திகள்

‘ராமாயணா’ படத்தால் தள்ளிப்போகிறதா ‘காட்ஜில்லா மைனஸ் ஜீரோ’ ரிலீஸ்?

'காட்ஜில்லா மைனஸ் ஜீரோ' படத்தின் இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்படலாம் என தககவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

'ராமாயணா' திரைப்படம் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் நிலையில், ‘காட்ஜில்லா மைனஸ் ஜீரோ' படத்துக்கு ஐமேக்ஸ் திரையரங்குகளில் போதிய காட்சிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே வாரத்தில் வெளியாக இருந்த படங்கள்

'காட்ஜில்லா மைனஸ் ஜீரோ' திரைப்படம் இந்தியாவில் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள 'ராமாயணம்' திரைப்படம் நவம்பர் 5-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதனால், இரு பெரிய படங்களும் ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்குகளில் திரையிடப்படுவதில் போட்டி ஏற்படும் சூழல் உருவானது. 'ராமாயணம்' படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான பிரீமியம் திரைகள் ஒதுக்கப்படலாம் என்பதால், 'காட்ஜில்லா மைனஸ் ஜீரோ' படத்துக்குக் குறைந்த காட்சிகளே கிடைக்கும் நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு வாரங்கள் தள்ளிப்போகிறதா?

இந்தத் திரையிடல் சிக்கலைத் தவிர்த்து, இந்தியாவில் அதிக திரைகளில் படத்தை வெளியிடும் நோக்கில் 'காட்ஜில்லா மைனஸ் ஜீரோ' திரைப்படத்தின் வெளியீட்டை இரண்டு வாரங்கள் தள்ளிவைக்க விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், புதிய வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தியாவில் நவம்பர் மாதத்திலேயே படம் வெளியாகும் என பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் நவம்பர் 3-ல் வெளியீடு

தகாஷி யமசாகி இயக்கியுள்ள 'காட்ஜில்லா மைனஸ் ஜீரோ', 2023-ம் ஆண்டு வெளியான 'காட்ஜில்லா மைனஸ் ஒன்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. ஜப்பானில் நவம்பர் 3-ம் தேதியும், வட அமெரிக்காவில் நவம்பர் 6-ம் தேதியும் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐமேக்ஸ் திரையரங்குகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT