சினிமா செய்திகள்

பிரபல நடிகை அணிந்திருந்த உள்ளாடை இவ்வளவு கோடியா? மலைக்க வைக்கும் விலை

உள்ளாடையின் மையப்பகுதியில் 75.54 கேரட் எடையுள்ள உயர் தர மஞ்சள் நிற வைரமும் பதியப்பட்டுள்ளது.

மும்பை,

அமெரிக்க தொலைக்காட்சி நடிகை கைலி ஜென்னர் (29 வயது) அணிந்த 50 மில்லியன் டாலர் விலை மதிப்புமிக்க உள்ளாடை சமூக வலைதளங்களில் பெண்களிடையே கவனம் பெற்றுள்ளது.

சாதாரணமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், இங்கே ஒரு உள்ளாடையின் விலையோ சுமார் ரூ.475 கோடி! அந்தப் பணத்தில் எத்தனை வீடுகள் வாங்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், உள்ளாடையையே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகையாக மாற்றியிருக்கிறார் அமெரிக்க நடிகை கைலி ஜென்னர்.

பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகையும், அழகு சாதனப் பொருட்கள் துறையில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருபவருமான கைலி ஜென்னர், பிரபல உள்ளாடை நிறுவனத்தின் பேஷன் ஷோவில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் அணிந்திருந்த உள்ளாடையின் விலையைக் கேட்டதும்தான் உண்மையான அதிர்ச்சி காத்திருந்தது.

பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் பேண்டசி உள்ளாடையில் 4,410 வைரங்களும், 18 கேரட் தங்கமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை உருவாக்குவதற்காக சுமார் 1,000 மணி நேரம் செலவிடப்பட்டதுடன் 15 கைவினைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்த ஆடையை உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமா? உள்ளாடையின் மையப்பகுதியில் 75.54 கேரட் எடையுள்ள உயர்தர மஞ்சள் நிற வைரமும் பதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாகத் தங்கச் சங்கிலி வாங்கும்போதே ஆயிரம் முறை யோசிக்கும் சாமானியர்களுக்கு, ஒரு உள்ளாடையில் இத்தனை வைரங்களையும் தங்கத்தையும் பார்த்தால் தலை சுற்றாதா என்ன?

இதற்கு முன்பு 3.5 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்ளாடைதான் அதிக விலை கொண்டதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது கைலி ஜென்னர் அணிந்துள்ள இந்த ஆடை, (50 மில்லியன் டாலர்)இந்திய மதிப்பில் சுமார் ரூ.475 கோடிஎனக் கூறப்படும் மதிப்புடன் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

கைலி ஜென்னர் அணிந்தது உள்ளாடைதான்..ஆனால் அதன் விலையைக் கேட்டால், அதை அணிந்தவரைவிடக் கேட்பவர்களுக்குத்தான் அதிகமாக வியர்க்கும் போலிருக்கிறது.

SCROLL FOR NEXT