சினிமா செய்திகள்

தேர்தல் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதா? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்‌ஷன்

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தல் பிரசாரத்திற்கு நீங்கள் செல்ல வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி கேட்டனர்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினிகாந்த் கூறியதாவது: ஜெயிலர் 2 படப்பிடிப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது. ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் குழு அறிவிக்கும். கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்” என்றார்.

தேர்தல் பிரசாரத்திற்கு நீங்கள் செல்ல வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு, நோ கமெண்ட்ஸ் என்று மட்டும் சொன்ன ரஜினிகாந்த் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.