சென்னை,
'வாண வேடிக்கை' படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னணி இயக்குநர் மோகன் ராஜா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மறைந்த நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் 'சகாப்தம்', 'மதுர வீரன்', 'படைத்தலைவன்', 'கொம்பு சீவி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது எல்.கே.சுதீஷ் தயாரித்து இயக்கும் 'வாண வேடிக்கை' என்ற புதிய படத்தில் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிவானி ராஜசேகர் நடிக்கிறார். மேலும், 'பருத்திவீரன்' சரவணன், இந்துமதி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், 'வாண வேடிக்கை' படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னணி இயக்குநர் மோகன் ராஜா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஜெயம்', 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியன்', 'தில்லாலங்கடி', 'வேலாயுதம்', 'தனி ஒருவன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. தற்போது இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் சண்முக பாண்டியனுக்கும், மோகன் ராஜாவுக்கும் இடையே இடம்பெறும் மோதல் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் 'வாண வேடிக்கை' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இயக்குநர் மோகன் ராஜா வில்லனாக நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.