சினிமா செய்திகள்

ஐஸ்வர்யாமேனனின் “நாகபந்தம்” படத்தின் டிரெய்லர் வெளியானது

அபிஷேக் நாமா இயக்கத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு நடித்துள்ள ‘நாகபந்தம்’ படம் ஜூலை 3ம் தேதி வெளியாகிறது.

இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘நாகபந்தம்’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை நபா நடேஷ் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘நாகபந்தம்’ படத்தின் டீசரை மகா சிவராத்திரி நாளில் மகேஷ்பாபு வெளியிட்டிருந்தார். பர்ஸ்ட் சிங்கிளான ‘நமோ ரே’ பாடலை சவுந்தர்ராஜன் வரிகளில் ஹரிப்ரியா பாடியிருந்தார். செகண்ட் சிங்கிளான ‘சுர சுர’ பாடலை மோகன் ரஞ்சன் வரிகளில் எஸ்பி அபிஷேக், சரத் சந்தோஷ், அனிலா ராஜீவ், பிருந்தா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

இந்நிலையில், ‘நாகபந்தம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் ஜூலை 3ம் தேதி வெளியாகிறது.

SCROLL FOR NEXT