சென்னை,
நடிகை சைத்ரா ஜே. ஆச்சார், இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் நடிப்பது குறித்த தனது மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தனது நடிப்பைத் திரையில் காண்பதற்குத் தனக்குள் இருக்கும் குழந்தை மிகவும் ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'இஞ்சி வெல்லம்' படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் சைத்ரா ஜே. ஆச்சாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மணிரத்னத்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். அதாவது, மணிரத்னம் தனது படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறிய அவர், தனக்கு மிகவும் சிறப்பான கதாபாத்திரத்தை அவர் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் தனது நடிப்பைப் பார்க்கத் தனக்குள் இருக்கும் குழந்தை மிகவும் ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததாக சைத்ரா தெரிவித்துள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பழகியதாகவும், யாரும் எந்தவிதமான பந்தாவும் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'பவுசி' படத்திலும் சைத்ரா ஜே. ஆச்சார் நடித்து வருகிறார். ஹனு ராகவபுடி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் பிரமாண்டமான அரங்குகளும் காட்சியமைப்புகளும் தனக்குப் புதிய அனுபவமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், படப்பிடிப்பின்போது பிரபாஸ் தனது நடிப்பைப் பாராட்டி ஊக்கமளிப்பதாகவும், அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சைத்ரா கூறியுள்ளார்.