சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் இன்று சர்வதேச போதை பொருளுக்கு எதிரான நாளையொட்டி சென்னையில் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் அவர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்ட பலர் அந்த மாரத்தானில் ஓடினார்கள். விஜய் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டரை கவர் செய்தார் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
இந்தநிலையில், கட்டாகுஸ்தி 2 பட நிகழ்வில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது:-
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் மாரத்தான் ஓடியதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
50 வயதை கடந்த ஒரு முதல்-அமைச்சர் மூன்று கிலோமீட்டர் ஓடும் பொழுது உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார்.
அதெல்லாம் பார்க்கும் பொழுது நன்றாக பாசிட்டிவாக இருந்தது. மேலும் சினிமாவிற்கு பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகிறது ஒவ்வொன்றாக அது நடைபெறும் என்று நம்புகிறேன் என்றார்.
விஷ்ணு விஷால் இப்போது கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதிலும் ஐஸ்வர்யா லட்சுமியே ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜூலை மூன்றாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இதன் முதல் பாகம் எப்படி பெரிய ஹிட்டடித்ததோ அதே போல் இந்தப் படமும் செம ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.