சென்னை,
'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருந்தார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லொஹர் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன் டிராகன் (பிரதீப் ரங்கநாதன்) தொழில் வாழ்க்கைக்காக என்னென்ன வேலைகள் செய்கிறார் என்பதை சுவாரஸ்யமான முறையில் காட்சிப்படுத்திய இப்படம் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட உலக அளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு அறிவித்துள்ளது. இதனை ரசிர்கள் கொண்டாடி வருகின்றனர்.