சினிமா செய்திகள்

"சிம்புவோட அம்மா இல்ல... சந்திராதான்' - அரசன் அப்டேட் கொடுத்த ஆண்ட்ரியா

தனுஷ் நடித்த ’வடசென்னை’ படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.

சென்னை,

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் குறித்து வெளியாகியிருந்த முக்கிய வதந்திக்கு நடிகை ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.

'அரசன்' படத்தை சுற்றிய தகவல்

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சிம்புவின் அம்மாவா ஆண்ட்ரியா?

படத்தின் தொடக்கத்தில் சிறுவயது சிம்புவின் தாயாக ஆண்ட்ரியா நடிப்பார் என்றும், அதன் பின்னர் கதாநாயகன் கேங்ஸ்டராக மாறும் வகையில் கதை நகரும் என்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

ஆண்ட்ரியா விளக்கம்

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு ஆண்ட்ரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் சிம்புவோட அம்மா கிடையாது. இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் 'சந்திரா' தான்" என்று கூறினார். தனுஷ் நடித்த ’வடசென்னை’ படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

SCROLL FOR NEXT