சினிமா செய்திகள்

ஜாக்கிசானின் காதலி

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர், அதிரடி ஆக்சன் நாயகன் ஜாக்கிசான். இவர் கடந்த 1982–ம் ஆண்டு தைவான் நடிகை ஜோன் லினை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்றுதான் இதுவரையில் அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர்.

சியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர், அதிரடி ஆக்சன் நாயகன் ஜாக்கிசான். இவர் கடந்த 1982ம் ஆண்டு தைவான் நடிகை ஜோன் லினை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்றுதான் இதுவரையில் அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் ஜோன் லின் தனது காதலியாக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமானதாகவும், கர்ப்பத்தின் காரணமாகவே அவரை திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டது என்றும் ஜாக்கிசான் மனம் திறந்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஜோன் லினை தவிர மற்றொரு பெண்ணை காதலித்ததாகவும், அவர் ஆசிய அழகி பட்டம் பெற்ற எலைன் என்ஜி என்றும் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.

இந்த ஓபன் டாக் ஒருபுறம் பத்திக்கொண்டு எரிய, ஜாக்கிக்கும், எலைன் என்ஜிக்கும் எட்டா என்ற மகள் இருப்பதாகவும், அவருக்காக ஹாங்காங்கில் பல வீடுகளை ஜாக்கிசான் வாங்கி வைத்திருக்கிறார் என்றும் இணையதளத்தில் செய்தி பரவி வருகிறது. இவ்வளவு சொன்ன ஜாக்கி, மீதி கதையையும் சொல்லியிருந்தால், இந்தச் செய்தி வதந்தியா? இல்லை உண்மையா? என தெரிந்திருக்கும் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...