சினிமா செய்திகள்

இணையத்தில் கசிந்த 'ஜெயிலர் 2' காட்சிகள்: தயாரிப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளிக் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெயிலர்-2’ படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்ததால் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளிக் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை தங்கள் திருட்டு தடுப்புக் குழு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் காணொளிக் காட்சிகளைப் பகிரும் அல்லது விளம்பரப்படுத்தும் சமூக வலைதளக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே வெளியான பதிவுகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளும் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே ரஜினிகாந்தின் ரசிகர்களும், சமூக வலைதள பயனாளர்களும் இந்தக் காணொளிக் காட்சியை பயன்படுத்துவதையோ, பகிர்வதையோ அல்லது மீண்டும் பதிவிடுவதையோ தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பகிர்வோர், பதிவிடுவோர், பதிவிறக்கம் செய்வோர் ஆகியோரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்காது” என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT