சினிமா செய்திகள்

“ஜன நாயகன்” இணை​யத்​தில் கசிந்த விவ​காரம்: தேடப்​படும் நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

‘ஜன நாயகன்’ பட வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளியான பிரதீப்​கு​மாரின் முன்​ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

தமிழக முதல்-அமைச்சரும், நடிகரு​மான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்​படம் கடந்த பொங்​கல் பண்​டிகைக்கு வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. தணிக்கை பிரச்​சினை​யால் வெளியாகவில்​லை. தணிக்கை வாரி​யத்​தின் மறுஆய்வு குழு முன்பாக இந்தப்​படம் நிலு​வை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில் இப் படம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி சட்​ட​விரோத​மாக இணை​யத்​தில் கசிந்​தது. இதுதொடர்​பாக ​த​யாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக் ஷன்ஸ் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீ​ஸார் 21 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்து பலரை கைது செய்​துள்​ளனர். இன்​னும் சிலரை தேடி வருகின்​றனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் போலீ​ஸா​ரால் தேடப்​பட்டு வரும் பிரதீப்​கு​மார் என்​பவர் தனக்கு முன்​ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை இன்று நடந்​தது. அப்​போது படத்​த​யாரிப்பு நிறு​வனம் தரப்​பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்​ரமணி​யன், ‘மனு​தா​ர​ரான பிரதீப்​கு​மார் இந்த வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளி என்​ப​தால் அவருக்கு முன்​ஜாமீன் வழங்​கக்​கூ​டாது’ என கடும் ஆட்​சேபம் தெரி​வி்த்​தார். அதையடுத்து பிரதீப்​கு​மாரின் முன்​ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.