மதுரை,
நடிகர் சூரியின் குடும்ப திருமண விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மதுரையில் நடைபெற்ற இந்த விழாவில் அவர் பங்கேற்ற புகைப்படங்களும், வீடியோவும் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
நடிகர் சூரியின் அண்ணன் மகன் திருமணம் மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்குமரன், இயக்குநர் ஜேசன் சஞ்சய், நடிகர் சஞ்சீவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்திய அவர்கள், குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சூரி பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதற்கிடையே, ஜேசன் சஞ்சய் அடுத்ததாக நடிகராகவும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அவரது அடுத்தகட்ட திரைப்பயணம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.