மலையாள நடிகர் ஜெயசூர்யா தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2015-ல் வெளியான மலையாள சினிமாவில் ரசிகர்களிடம் காமெடி திரைப்படமாக தனி இடத்தை பெற்ற ‘ஆடு’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான ‘ஆடு 2’ திரைப்படமும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது பாகமான ‘ஆடு 3’ உருவாகியுள்ளது.
இந்த படத் தொடரின் மையக் கதாபாத்திரமான ஷாஜி பாப்பன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயசூர்யா மீண்டும் நடித்துள்ளார். அவரின் வித்தியாசமான காமெடி நடிப்பு, உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி காரணமாக இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியுள்ளார். ஷான் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘ஆடு 3’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிளான ‘சுல்தான்’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வேதிகாவின் நடனத்தில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் வருகிற 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.