சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் ஜோடி சேரும் ஜீவா - அஞ்சலி

வசந்த பாலன் இயக்கத்தில் ஜீவா, அஞ்சலி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வெயில்’ படம் மூலம் தேசிய விருது பெற்ற டைரக்டர் வசந்தபாலன் சமீபத்தில்‘அநீதி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் அர்ஜுன்தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வணிக ரீதியாக ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது.

தற்போது, கண்ணா ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர்கள் ஜீவா, அஞ்சலியை வைத்து வசந்த பாலன் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007-ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘கற்றது தமிழ்’ திரைப்படத்திற்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து ஜீவாவும் அஞ்சலியும் இணைந்து நடிக்கவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசந்தபாலனின் அங்காடித் தெரு, அரவான் ஆகிய படங்களில் அஞ்சலி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.