சினிமா செய்திகள்

ஜீவாவின் 46வது படப்பிடிப்பு பூஜை அப்டேட்

நடிகர் ஜீவாவின் 46வது படத்தை பாலசுப்ரமணி இயக்குகிறார்.

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' படம் கலவையான விமர்சங்களை பெற்றது.ஜீவா நடிக்கும் 45-வது படத்தை மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பேலிமி படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கும் 46-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் மீண்டும் ஜீவா நடிக்கவுள்ளார்.