சினிமா செய்திகள்

‘ஜோ’ ஹீரோயின் மாளவிகா மனோஜ்… சினிமா பயணம் தொடங்கியது எப்படி?

நடிகை மாளவிகா மனோஜ் தற்போது மீரா கதிரவன் இயக்கத்தில் ஹபீபி என்ற படத்தில் நடித்துள்ளார்.

கேரள தேசம் தமிழுக்கு தந்த அழகான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மனோஜ். தமிழில் இவர் நடித்த 'ஜோ', 'ஆண்பாவம் பொல்லாதது' போன்ற படங்கள் ரசிகர்களிடையே அவரை ஆழமாக கடத்தியது. தற்போது ரவி மோகனுடன் ‘புரோ கோட்' படத்தில் நடிக்கிறார். படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் மாளவிகா மனோஜ், தமிழ்ப் புத்தாண்டையொட்டி அளித்த பேட்டியில் சினிமாவிற்கு நுழைந்தது எப்படி என்று கூறியுள்ளார்.

அதாவது, 10-ம் வகுப்பு படிக்கும்போது, ஒரு ஆடிஷனுக்கு என்னை கேட்காமல் என் அம்மா என் புகைப்படத்தை அனுப்பி வைத்தார். அவர்களும் ஆடிஷனுக்கு அழைக்க நானும் சென்றேன், தேர்வும் ஆனேன். அப்படி நான் நடித்த முதல் படம் தான், 'பிரகாசன் பறக்கட்டே'. அதன்பிறகு சினிமாவை விட மனசில்லை.

தற்போது, வாய்ப்புகள் நிறையவே வருகின்றன. கதைக்கு முக்கியமான, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தான் நான் விரும்புகிறேன். அப்படிப்பட்ட கதைகளை தான் நான் தேர்வும் செய்கிறேன். அதனால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது. ஒரு படம் நடித்தாலும் அது பேர் சொல்லும்படி இருக்கவேண்டும். என்றார்.

மேலும், தற்போது ஹபீபி என்ற படத்தில் நடித்துள்ளேன். இது உணர்வுப்பூர்வமான, அழுத்தமான கதை. வசனங்களைக் காட்டிலும் முகபாவங்கள் மூலமும், உடல் மொழியாலும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் அது. இயக்குனர் மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.