சினிமா செய்திகள்

“ஜான் டோ” படத்தில் சஞ்சனா நடராஜனின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி நடிக்கும் ‘ஜான் டோ’ படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்கிறார்.

மதுமிதா இயக்கத்தில் சஞ்சனா நடராஜன் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் போஸ்டர் வெளியானது. இப்படத்தில் ஏ. ராவ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் நடிக்கிறார் .

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜான் டோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை மதுமிதா இயக்குகிறார்.

பரபரப்பான கிரைம் த்ரில்லர்

ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தை ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யார்லகட்டா தயாரிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு

இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து எழுதியுள்ளார். படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பணிகளையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.

கூட்டணிப் பின்னணி

இயக்குநர் மதுமிதா ஏற்கனவே ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘கே.டி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் ‘கே.டி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘காளிதர் லாபதா’ வெளியானது.

அர்ஜூன் தாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கிறார் .

சஞ்சனா நடராஜனின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

இந்த நிலையில், ‘ஜான் டோ’ நடிக்கும் சஞ்சனா நடராஜனின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சஞ்சனா நடராஜனும் ஏ. ராவ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT