சினிமா செய்திகள்

’சாம்பியன்’ படத்தின் டீசரை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர்

ரோஷன், அனஸ்வரா நடித்துள்ள சாம்பியன் படம் நாளை வெளியாக உள்ளது.

சென்னை,

மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தற்போது ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடிப்பில் சாம்பியன் என்ற படத்தைத் தயாரித்துள்ளது.

இதில் , கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா நடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் சந்திரகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கும் இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் சாம்பியன் படத்தின் செலிப்ரேஷன் டீசரை வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT