கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

நடிகர்களை விட நடிகைகளுக்கு பெரிய சவால்கள் இருக்கின்றன - கஜோல்

திறமை இருந்தாலும் வயதை வைத்து விமர்சிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்று நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் 90-களில் கனவு கன்னியாக வலம் வந்தவர், கஜோல், இவர் தமிழில் 'மின்சார கனவு', 'வேலையில்லா பட்டதாரி-2' படங்களில் நடித்துள்ளார். 51 வயதிலும் அழகு குறையாமல் வலம் வரும் கஜோல், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

"பொதுவாக நடிகர்களை விட நடிகைகளுக்கு மிகப்பெரிய சவால்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது தங்களது வயதை தோற்றத்தில் காட்டக்கூடாது என்பதுதான். இங்கு என்னதான் திறமை இருந்தாலும் வயதை வைத்து விமர்சிக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது.

எனவே எந்த சூழலிலும் நடிகைகள் அதில் சுணக்கமாக இருக்கக்கூடாது. நமது வயதை குடும்பத்தார் தவிர வேறு யாருமே யூகிக்க முடியாதபடி நடமாடுங்கள். அது நமக்குள் தன்னம்பிக்கையை இன்னும் அழுத்தமாக வளரச்செய்யும்", என்று கஜோல் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். கஜோலின் இந்த கருத்து கவனம் ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT