சினிமா செய்திகள்

கலையரசன், கயல் ஆனந்தி நடித்த “டைட்டானிக்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அறிமுக இயக்குனர் ஜானகி ராமன் இயக்கத்தில் கலையரசன், கயல் ஆனந்தி நடிப்பில் ‘டைட்டானிக்’ படம் உருவாகியுள்ளது.

நடிகர் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டைட்டானிக்’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜானகிராமன் இயக்கத்தில், ‘டைட்டானிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயிண்ட்மென்ட் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், ‘டைட்டானிக்’ படம் வரும் அக்டோபர் 16ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் கடந்த ஜுலை 18ம் தேதி வெளியாக இருந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT