சினிமா செய்திகள்

90ஸ் பாணியில் பிலிம் கேமராவில் படமாக்கப்படும் கமல்-ரஜினி படம்

ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை 'டான்' படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார்.

47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி-கமல் இணையும் (KHxRK) படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் களமிறங்கியுள்ளார். மேலும் வில்லனாக மம்முட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது

சமீபத்தில் இந்த படத்தின் (KHxRK) புரோமோ வீடியோ வெளியானது. அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இந்தப் புரோமோ மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த வீடியோவில், கமலும் ரஜினியும் இணைந்து இயக்குனர் நெல்சனிடம் யார் ஹீரோ என்று கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், KHxRK படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் பழைய 80ஸ், 90ஸ் பாணியில் பிலிம் கேமராவில் படமாக்கப்பட உள்ளது. இயக்குனர் நெல்சன், இந்த படத்தை பழைய அனலாக் பிலிம் முறையில் இயக்கவுள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே புரோமோ படப்பிடிப்பு இந்த முறையில் எடுக்கப்படுவதாக இருந்தது.. ஆனால் நேரமின்மை காரணமாக டிஜிட்டல் முறையில் புரோமோ படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.