சினிமா செய்திகள்

நடிகரும் இயக்குனருமான சேரனின் தாயார் கமலா பாண்டியன் இயற்கை எய்தினார்

திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சேரன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை,

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் படங்களை இயக்கியது மட்டுமல்லாமல், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் .

இந்த நிலையில், இன்று சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் (84) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இந்தச் செய்தி திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் துயரச் சம்பவத்தையொட்டி, திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சேரன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கமலா பாண்டியன் அவர்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் நல்லடக்கம், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான பாளையூர்பட்டியில் நடைபெற உள்ளது.