சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப் பயணம் “நாளை நமதே”

நடிகர் கமல் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளார். #KamalHaasan | #NaalaiNamadhae

தினத்தந்தி

சென்னை

பிப்ரவரி 21ந்தேதி புதிய கட்சி தொடங்கும் கமல்ஹாசன், 23ந்தேதி வரை முதல் கட்டமாக சுற்றுப் பயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது தனது அரசியல் பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே நாளை நமதே. அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம். கிராமங்களை தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#KamalHaasan | #NaalaiNamadhae | #PoliticalEntry | #TNPolitics

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்