சினிமா செய்திகள்

'தனி ஒருவன்' பட இயக்குனருடன் கைகோர்த்த கார்த்தி

நடிகர் கார்த்தியை கதாநாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை எழுதி இயக்க இருப்பதாக மோகன் ராஜா அறிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியுடன் முதல் கூட்டணி

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, ரீமேக் படங்கள் மட்டுமின்றி 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்' போன்ற சொந்த கதைகளின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற 'லூசிபர்' திரைப்படத்தை தெலுங்கில் 'காட் பாதர்' என்ற பெயரில் இயக்கியிருந்தார்.

'சர்தார் 2' வெளியீட்டுக்குப் பிறகு படப்பிடிப்பு

இந்த நிலையில், நடிகர் கார்த்தியை கதாநாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை எழுதி இயக்க இருப்பதாக மோகன் ராஜா அறிவித்துள்ளார். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது கார்த்தி நடித்துள்ள 'சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து மோகன் ராஜா - கார்த்தி கூட்டணியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT