சென்னை,
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வா வாத்தியார்' கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கார்த்தி 'சர்தார்-2', 'மார்ஷல்', ‘கைதி-2' படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கார்த்தி நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி 'பசங்க', 'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'நம்ம வீட்டு பிள்ளை', 'தலைவன் தலைவி' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் தான் கார்த்தி தனது புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம். கதை விவாத பணிகளும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம்' படம் 2018-ம் ஆண்டில் வெளியாகி வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது.