சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் இளம் இயக்குநர்களை முன்னின்று நடத்தக்கூடிய தலைவன் - இயக்குநர் மணிரத்னம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியானது.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ‘டோரதி’ திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் மணிரத்னம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சற்று மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரிஷிகாந்த் மற்றும் சனந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியானது.

முதன்முறையாக இளையராஜா இசை

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' திரைப்படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். தற்போது முதன்முறையாக, முழு திரைப்படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஆணாதிக்க ஒடுக்குமுறை

‘டோரதி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆணாதிக்க வன்முறை, ஒடுக்குமுறை, சாதி குறித்த இப்படத்தில் சொல்லப்பட்ட கருத்து வைரலாகி வருகிறது.

டோரதி படத்தின் வசூல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் சுமார் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது.

திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் மணிரத்னம்

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ‘டோரதி’ திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் மணிரத்னம் வீடியோ வெளியிட்டுள்ளார். படம் குறித்து , இயக்குநர் மணிரத்னம் “கார்த்திக் சுப்புராஜ் ஒரு சிறந்த கலைஞர், அவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது பேரதிர்ஷ்டம், இளம் இயக்குநர்களை முன்னின்று நடத்தக்கூடிய தலைவனாக அவர் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 'போரதி' ஒரு சிறந்த படம், அவரது திரைமொழியும் அதனுடன் இளையராஜா சாரின் இசையும் இணைந்தது இன்னும் சிறப்பாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT