சினிமா செய்திகள்

50வது நாளை நிறைவு செய்த கார்த்திக் சுப்புராஜின் “டோரதி”

கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘டோரதி’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘டோரதி’ திரைப்படம் வெற்றிகரமாக 50-வது நாளை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

கார்த்திக் சுப்பராஜின் 10-வது திரைப்படம்

இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

மூன்றாம் பாலினத்தவர் வாழ்க்கை

‘டோரதி’ திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று ரூ. 20 கோடி வரை வசூலித்தது

பேசுபொருளான பாலின பாகுபாடு

படத்தில் பேசப்பட்ட பாலின பாகுபாடு, மூன்றாம் பாலினத்தவரின் சவால்கள், சமூக ஒடுக்குமுறை உள்ளிட்ட விஷயங்கள் சினிமாவைத் தாண்டி அரசியல் தளத்திலும் பேசு பொருளானது. மேலும் தமிழ்நாடு காவல்துறை மத்தியில் இப்படம் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கலந்து கொண்டார். இப்படம் அக்டோபர் 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

50வது நாளில் ‘டோரதி’

இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படம் 50வது நாளை கடந்துள்ளது. படக்குழுவினர் இன்று ரசிகர்களுடன் நேரில் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கமலா திரையரங்கில் காலை 10.30 மணி காட்சியிலும் தி.நகர் ஏஜிஎஸ் திரையரங்கில் மாலை 4 மணி காட்சியிலும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT