சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜின் “நீளிரா” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

சோமிதரண் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘நீளிரா’ படம் வருகிற ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் 'ஸ்பிரிட் மீடியா' தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது.

நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனம் 2005ல் உருவாக்கப்பட்டது. இதில் 70-க்கும் மேல்பட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளன. அதேபோல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தை 2015ல் தொடங்கினார். இந்தத் தயாரிப்பில் பத்துக்கும் மேல்பட்ட படங்கள் உருவாகியுள்ளன.

இந்த இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த புதிய படத்திற்கு "நீளிரா" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா, விது ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘நீளிரா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. ‘கல்யாண பைலா’ பாடலை வாகீசன் ராசையா எழுத வாகீசன் ராசையா, ரமணன் நந்தகோபால், கில்மிஷா உதயசீலன் இணைந்து பாடியுள்ளனர்.

SCROLL FOR NEXT