மதுரை,
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த படத்திலிருந்து "காட் மோட்", "நாங்க நாலு பேரு", "ராத்து ராசன்" என்ற பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றன.
இதற்கிடையில், இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 26ந் தேதி மதுரையில் உள்ள சோலமலை பாலிடெக்னிக் கல்லூயில் இந்த விழா நடைபெரும் என்று தகவல் கிடைத்துள்ளது.