சினிமா செய்திகள்

சிம்பு குரலில் “கருப்பு” படத்தின் “நாங்க நாலு பேரு” பாடல் வெளியானது

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே 14-ம் தேதி வெளியாகிறது.

நடிகர் சூர்யாவின் 45-வது படம் ‘கருப்பு’ . இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. சூர்யா இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து முதல் பாடலான ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரலானது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது. ‘நாங்க நாலு பேரு’ பாடலை அசல் கோலார் எழுத சிம்பு, அசல் கோலார், சாய் அபயங்கர் இணைந்து பாடியுள்ளனர்.