சென்னை,
இயக்குநர் மிஷ்கின் ஹபீபி படத்தின் நிகழ்வில் கஸ்தூரி ராஜா குறித்து பேசியுள்ளார்.
அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களின் இயக்குநர் மீரா கதிரவன் ஹபீபி என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவான இதில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். இப்படத்தின் நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "இயக்குநர் மீரா கதிரவன் ஓடக்கூடிய படத்தை இயக்கவில்லை, ஓட வேண்டிய படத்தை இயக்கியுள்ளார்.
ஹபீபி மூலம் பெரிய வாழ்க்கையை அழகான காதல் மூலம் கூறியிருக்கிறார். இப்படத்திற்குப் பின் மீரா கதிரவன் ஓய்வு பெற்றுவிடலாம். இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டால் சினிமாவில் வந்த வேலை முடிந்தது. இது ஒரு மேன்மையான திரைப்படம். இலக்கியம் தெரிந்த படைப்பாளியான தன் கடைசி காட்சியில் மிளிர்கிறார். நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா நல்ல கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷைவிட சிறந்த நடிகர் கஸ்தூரி ராஜா." எனப் பாராட்டியுள்ளார்.