சென்னை,
கவின், சஞ்சனா நடிப்பில் உருவாக உள்ள ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
‘லிப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர்’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இவரது நடிப்பில் வெளியான ‘மாஸ்க்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘தண்டட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டு இன்று கோலாகலமாக பூஜையும் சென்னையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி கவின் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘லப்பர் பந்து’ படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த சஞ்சனா கவின் ஜோடியாக ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் காமெடியில் அசத்தி வரும் பால சரவணனும் முக்கிய ரோலில் இணைந்துள்ளார்.
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், கே.ஆர். விஜயா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் டைட்டிலை கவினின் புதிய படத்துக்கு சூட்டியுள்ளனர்.