சினிமா செய்திகள்

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

‘ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு கென் கருணாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சிலம்பரசனுடன் ‘அரசன்’

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கைவசம் ‘அரசன்’, ‘ராஜன் வகையறா’ படங்கள் உள்ளன. இதில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் ‘அரசன்’ படம் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

ராஜன் வகையறா

இதனிடையே, ‘ராஜன் வகையறா’ படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் அமீர் கதாபாத்திரத்தின் இளம்வயது வாழ்க்கையில் நடிகர் கென் கருணாஸ் நடித்து வருகிறார்.

இப்படம் ‘வடசென்னை’ படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தின் சிறுவயது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘தமிழ்முருகன்’ படத்திற்காகவும் வெற்றிமாறன் மற்றும் சாய் அபயங்கர் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் வாழ்த்து

இந்த நிலையில், தனித்துவமான படைப்புகளால் தமிழ் சினிமாவை உச்சிக்குக் கொண்டு சென்ற இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் பிறந்த நாளுக்கு நடிகர் கென் கருணாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகனாக நடித்த கென் கருணாஸ், ‘யூத்’ என்ற படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் வெற்றிமாறன் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT