சினிமா செய்திகள்

அதிக கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்த கென்ட்ரிக்

66 பிரிவுகளில் போட்டியிட்ட கென்ரிக் லாமர் இதுவரை 27 விருதுகளை வென்றுள்ளார்.

சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமி விருதுகள் கருதப் படுகின்றன. லாஸ் ஏஞ்சலீஸில் 68-ஆவது கிராமி விருது விழா நிகழ்வுகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நள்ளிரவு நடைபெற்றன.

அமெரிக்க பாப் இசைக் கலைஞர் கென்ரிக் லாமர் இந்தாண்டு ஐந்து கிராமி விருதுகளைப் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார். கிராமி விருது வரலாற்றிலேயே அதிக விருதுகள் பெற்ற ராப் இசைக்கலைஞராக கென்ரிக் சாதனை படைத்து அசத்தியுள்ளார். இந்த விழாவில் பாப் இசைக் கலைஞர் கென்ரிக்குஐந்து பிரிவுகளில் கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஆல்பம், ரெகார்ட் ஆப் த இயர், சிறந்த மெலோடிக் ரேப் இசை, சிறந்த ராப் இசை, சிறந்த ராப் இசை நடனம் என ஐந்து பிரிவுகளில் வழங்கப்பட்டன. இதுவரை, மொத்தமாக 66 பிரிவுகளில் போட்டியிட்ட கென்ரிக் லாமர் 27 விருதுகளை வென்றுள்ளார். இதற்கு முன்பாக அதிகபட்சமாக ஜே-இசட் என்ற ராப் இசைக் கலைஞர் 26 விருதுகளைப் பெற்றிருந்தார்.

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வங்காளதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டது

சவுதி அரேபியா சென்ற அஜித் தோவலுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு

2025-ல் இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் ரூ.14.06 லட்சம் கோடி

இரு விமானங்கள் உரசி விபத்து.. மும்பையில் பரபரப்பு