சினிமா செய்திகள்

'மட்பிஷ்' படம் மூலம் மலையாளத்தில் தடம் பதிக்கும் கெனீஷா

கெனீஷா பிரான்சிஸ் தற்போது மலையாள திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

சென்னை,

பல்திறமையால் கவனம் ஈர்த்த கெனீஷா

கெனீஷா பிரான்சிஸ் பாடகி, டான்சர் மற்றும் ஹீலிங் தெரபிஸ்ட் என பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என ஆறு மொழிகளில் பாடிக்கொண்டே நடனமாடும் தனித்திறன் கொண்டவராக அறியப்படுகிறார். பல இசைக் கச்சேரிகளை நடத்தி ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

மலையாள திரையுலகில் புதிய பயணம்

சினிமா படப்பிடிப்பிற்காக கோவா சென்றிருந்த ரவி மோகன் உடன் ஏற்பட்ட நட்பு காரணமாக கெனீஷா கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டார். இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களால் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மலையாள திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

'மட்பிஷ்' திரைப்படத்தின் மூலம் தனது குரல் மற்றும் இசைத்திறமையை வெளிப்படுத்த உள்ளார். கெனீஷாவின் இந்த புதிய பரிமாணம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.