கேரள அரசின் 18-வது சர்வதேச சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் ‘மரம் மரங்கொத்தி’ தமிழ் குறும்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
கேரள அரசின் 18-வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் இருந்து 1900-க்கும் மேற்பட்ட குறும்படம் மற்றும் ஆவணப் படங்கள் பங்கேற்றன. அதில், 24 படங்கள் தேர்வாகின. முதல் பரிசுக்கு தமிழ் குறும்படமான ‘மரம் மரங்கொத்தி’ தேர்வானது. கூடலூரை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட அந்தப் படமும் விழாவில் திரையிடப்பட்டது.
‘மரம் மரங்கொத்தி’ படத்தை நிசாந்த் மாசிலாமணி தயாரிப்பில் டார்வின் அன்னகுமார் இயக்கியுள்ளார். இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை, பிரிவு மற்றும் நம்பிக்கைகளை பேசக்கூடியது இந்தப் படம். விழாவில் பங்கேற்ற சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டுகளை ‘மரம் மரங்கொத்தி’ படம் பெற்றுள்ளது.