பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் குஷ்பூ கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பூ. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
இளைய மகளான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவரின் `பொன்னியின் செல்வன்', `பொன்னியின் செல்வன் 2' மற்றும் `தக் லைப்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது மூத்த மகளான அவந்திகா சினிமாவில் தனது பயணத்தை துவங்கியுள்ளார். சில மாதங்கள் முன்பு நகைக்கடை விளம்பரத்தின் மாடலாக அவந்திகா நடித்தது பற்றி உணர்வுபூர்வமான குறிப்பை பதிவு செய்தார் குஷ்பூ.
அவந்திகா ‘ஆரம்பம்’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.சுஜேஷ் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று திரிசூரில் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் அவந்திகா மற்றும் சரிதா முதன்மை பாத்திரங்களில் நடிக்க அல்தாப் சலீம், இந்திரன்ஸ், விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உட்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிப்பில் ஆர்வம் கொண்ட அவந்திகா லண்டன் சென்று நடிப்பு கற்று வந்தார். விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகுமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மலையாள படத்தின் மூலம் சினிமா என்ட்ரி கொடுக்கிறார் அவந்திகா. இப்படம் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.