சினிமா செய்திகள்

லேடீஸ் அண்ட் லேடீஸ்... வைரலாகும் 'டாக்ஸிக்' படத்தின் நாயகிகள் அறிமுக வீடியோ

'டாக்ஸிக்' திரைப்படம் ஆகஸ்ட் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள திரைப்படம் 'டாக்ஸிக்'. கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்சன் திரில்லர் கதையாக 'டாக்ஸிக்' படம் உருவாகியுள்ளது. ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'டாக்ஸிக்' திரைப்படம் ஆகஸ்ட் 26-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'லேடீஸ் அண்ட் லேடீஸ்' என்ற பெயரில் 'டாக்ஸிக்' படத்தின் கதாநாயகிகள் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.