சினிமா செய்திகள்

மொழி எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை - ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.

சென்னை,

மொழி எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அனைத்து மொழிகளையும் தனது சொந்த மொழியாகவே கருதுவதாக ராஷ்மிகா தெரிவித்தார்.

பல மொழிகளில் பிசியாக நடிக்கும் ராஷ்மிகா

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ கன்னட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’, ‘பீஷ்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, இந்தியில் ‘அனிமல்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘புஷ்பா’ படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ‘மைசா’, ‘ரணபாலி’, 'எம்.எஸ். ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்'உள்ளிட்ட படங்கள் அவரது கைவசம் உள்ளன.

“மொழி தடையாக இருந்ததில்லை”

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அனைத்து மொழிகளையும் தனது சொந்த மொழியாகவே கருதுவதாக தெரிவித்தார். ரசிகர்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் அந்தந்த மொழிகளைப் பயன்படுத்துவதாகவும் கூறினார். மேலும், “மொழி எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. தேவையற்ற விமர்சனங்களை புறக்கணித்துவிட்டு, ஒவ்வொரு படத்திலும் எனது சிறந்த நடிப்பை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT