சினிமா செய்திகள்

“தலைவா, உங்களை இன்னும் பல முறை கொண்டாடக் காத்திருக்கிறேன்” - ரஜினியைப் பாராட்டிய ரவிமோகன்

'ஜெயிலர் 2' திரைப்படம், வெளியான இரண்டே நாள்களில், உலகளாவிய வசூல் ரூ.209.10 கோடியை எட்டியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளன.

சென்னை,

தலைவா எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இன்றுவரை என்னையும் சேர்த்து நம் அனைவரையும் சினிமாவை நேசிக்க வைத்ததற்கு நீங்கள்தான் முன்னோடி! உங்களை இன்னும் பல முறை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்!. என்று ரவிமோகன் பதிவிட்டுள்ளார்.

‘ஜெயிலர் 2’ திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

காமெடி, ஆக்‌ஷன், எமோஷன்!

படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணா, யோகிபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் படத்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரவிமோகன் பதிவு

இந்த நிலையில், நடிகர் ரவிமோகன் சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்னும் பல முறை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவா எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இன்றுவரை என்னையும் சேர்த்து நம் அனைவரையும் சினிமாவை நேசிக்க வைத்ததற்கு நீங்கள்தான் முன்னோடி! உங்களை இன்னும் பல முறை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்!.. ஜெயிலர் 2 படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஹிருத்திக், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, வித்யா பாலன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT