சினிமா செய்திகள்

பழம்பெரும் தெலுங்கு பட இயக்குநர் திரிபுரனேனி சிட்டிபாபு மாரடைப்பால் காலமானார்; ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல்

சமூகத்தில் ஈடு இணையற்றவராக இருந்த, பன்முக திறமை வாய்ந்த அவருடைய பணிகள் உண்மையில் குறிப்பிடத்தக்கவை என பதிவிட்டு உள்ளார்.

ஐதராபாத்

தெலுங்கு படவுலகில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக அறியப்படுபவர் திரிபுரனேனி சிட்டிபாபு. பழம்பெரும் இயக்குநரான அவர், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71.

அவருடைய மறைவுக்கு ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர், அரசியல் நிபுணர் சிட்டி பாபு மறைவு செய்தியறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்.

சமூகத்தில் ஈடு இணையற்றவராக இருந்த, பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுத்து, பன்முக திறமை வாய்ந்த அவருடைய பணிகள் உண்மையில் குறிப்பிடத்தக்கவை. அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.