சென்னை,
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவருக்கு துஷ்யந்த், தர்ஷன் கணேசன் என 2 மகன்கள் உள்ளனர்.
இதனிடையே, சத்தியஜோதி பிலிம்ஸ் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் டி.டி.பாலசந்திரன் டைரக்ஷனில் உருவாகி வரௌம் திரைப்படம் லெனின் பாண்டியன். இப்படத்தின் கதாநாயகனாக சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கங்கை அமரன், நடிகை ரோஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள ’உன்னை நம்பி’ எனத்தொடங்கும் இந்த பாடல் நாளை மறுதினம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக லெனின் பாண்டியன் படத்தின் டிரெய்லர் கடந்த 15ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.