லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தின் டிரெய்லரை சிம்பு வெளியிட்டுள்ளார்.
சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லரை சிம்பு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் டிரெய்லர், குடும்ப உணர்வுகள், காதல், ஆக்ஷன், காமெடி என பல அம்சங்களைக் கலந்து வழங்கும் ஒரு கமர்ஷியல் படத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அழகான அம்மா - மகன் பாசத்துடன் தொடங்கும் டிரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகனின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது, அதன் மூலம் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை டிரெய்லர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியுடன் குற்றச் செயல்கள் சார்ந்த சம்பவங்களும் இணைந்திருப்பது கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.
அம்மா - மகன் பாசம், காதல், ஆக்சன், காமெடி என ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு இடையே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், நகைச்சுவை மற்றும் காதல் தருணங்களும் இடம்பெறுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலையும் டிரெய்லர் ஏற்படுத்துகிறது.