சினிமா செய்திகள்

யாருக்கும் சந்தேகம் வேண்டாம் நான் சென்னையில் தான் இருக்கிறேன் - சூர்யா விளக்கம்

'சர்தார்-2' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார்.

சென்னை,

நான் சென்னையில் தான் இருக்கிறேன். இங்கிருந்துதான் மும்பை போயிட்டு வருகிறேன். மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக பேசப்படும் நிலையில் சூர்யாவின் இந்த பதில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கார்த்தியின் 'சர்தார்-2'

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள புதிய படம் 'சர்தார்-2'. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மண் குமார், இஷான் சக்சேனா, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற 10ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

சென்னையில் தான் இருக்கிறேன்

இந்த நிலையில், நேற்று முன்தினம் 'சர்தார்-2' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கார்த்தியின் அண்ணனும், முன்னணி நடிகருமான சூர்யா பங்கேற்று பேசும்போது, "மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து செல்வதாக பலரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நான் சென்னைதான். நான் இங்கேதான் இருக்கிறேன். இங்கிருந்துதான் அங்கே போயிட்டு போயிட்டு வருகிறேன். இனி சந்தேகமே வேண்டாம். இதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்”, என்று குறிப்பிட்டார். மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக பேசப்படும் நிலையில் சூர்யாவின் இந்த பதில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அண்ணனைத் தம்பி மிஞ்சினால் சந்தோஷம்தான்

கார்த்தி பேசும்போது. 'உங்கள் அண்ணன் நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் (ரூ.250 கோடி) வசூலை 'சர்தார்-2' முறியடிக்குமா?' என்று கேட்கப்பட்டது. இதற்கு “அண்ணனைத் தம்பி மிஞ்சினால் சந்தோஷம் தான். என்னை பொறுத்தவரை பணம் போட்டு படம் எடுக்கும் எல்லா தயாரிப்பாளர்களும் ஜெயிக்க வேண்டும். அதுதான் வேண்டும். 'சர்தார்-2' படம் முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பேசும். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்', என்று கார்த்தி பதிலளித்தார்.

SCROLL FOR NEXT