சினிமா செய்திகள்

ஊர்கூடிச் சிந்திப்போம்; திருப்பூரில் சந்திப்போம் - கவிஞர் வைரமுத்து

நாளை மாலை 4 மணிக்கு "அறிவை விரிவுசெய்" என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளதாக வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து, நாளை (சனிக்கிழமை) திருப்பூரில் நடைபெறும் சுழற்சங்க மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் சந்திப்போம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”நாளை சனிக்கிழமை திருப்பூர் வருகிறேன். ஈராயிரம்பேர் கூடும் சுழற்சங்க மாநாட்டில் உரையாற்றுகிறேன்.

நேரம் மாலை 4 மணி தலைப்பு அறிவை விரிவுசெய். தமிழ் என்பது அலங்காரப் பொருள் அல்ல; ஆக்கப் பொருள் என்று காட்டி எங்கள் தமிழ் மக்களை உயர்த்தும் உரையாக அது திகழவேண்டும் என்பது தீராத ஆசை.

ஆசை மெய்ப்பட வாழ்த்துங்கள். ஊர்கூடிச் சிந்திப்போம்; திருப்பூரில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.