சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
நீண்ட நாட்களாக பல தடைகளை கடந்து இறுதியாக கடந்த 10ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. லவ், பேண்டஸி கதைக்களத்தில் வெளியான இந்த படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது இப்படத்தின் 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம 5 நாட்களில் உலகளவில் ரூ.45 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் பிரதீப் ரங்கநாதனின் மற்ற படங்களை போல ரூ.100 வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.