சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' படத்தின் பர்ஸ்ட் லுக்

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் 'சிறை' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்துவருகிறார்.

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இவர் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சிறை ' எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் அனந்தா, எல் கே அக்ஷய் குமார் , அனீஸ்மா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.

இதில் நடிகர் விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் 'சிறை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்திற்கான கதையை டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT