சினிமா செய்திகள்

மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்திய மாதம்பட்டி ரங்கராஜ்.. வைரலாகும் புகைப்படங்கள்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் தங்களின் மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்தி உள்ளனர்.

சென்னை,

மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் தனது மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்தி உள்ளார். அந்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக ஜாய் கிரிசில்டா வெளியிட்டு இருக்கிறார்.

வழக்கு தொடர்ந்த ஜாய் கிரிசில்டா

நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு. இந்தநிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடுத்தார்.

டி.என்.ஏ. சோதனையில் உறுதி

அவருக்கு பிறந்தது என்னுடைய குழந்தை என நிரூபித்தால் எல்லா செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என கோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் கூறினார். அதன்பின் நடந்த டி.என்.ஏ. சோதனையில் அது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை தான் என உறுதியானது. அதன்பின்னர் சமரசம் ஆகி தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் தனது மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்தியும் இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக ஜாய் கிரிசில்டா வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜூக்கு 'வாழ்த்துகள்' குவிகின்றன.