சினிமா செய்திகள்

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற நடிகர் மாதவன் அணிந்திருந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா...? - சுவாரசிய தகவல்

நடிகர் மாதவனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

டெல்லி,

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற நடிகர் மாதவன் அணிந்திருந்த வாட்ச் விலை எவ்வளவு என்பது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிதற்காக மத்திய அரசின் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கலைத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்த 23ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் நடிகர் மாதவனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

இதனிடையே, பத்ம விருதுகள் வழங்கும் விழாவிற்கு வந்திருந்த மாதவன் தனது கையில் அணிந்திருந்த வாட்ச் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

டைட்டன் வாட்ச்

இந்நிலையில், மாதவன் அணிந்திருந்த வாட்ச் குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாதவன் அணிந்திருந்த வாட்ச் டைட்டன் நிறுவனத்தின் டைட்டன் நிபுலா ஜல்சா பிளையிங் டுர்பிலின் ரக வாட்ச் என்பதை தெரியவந்துள்ளது. இந்த ரக வாட்ச் மொத்தம் 10 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சின் விலை ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் என தெரியவந்துள்ளது.